Witness4

கிறிஸ்தவனின் தமிழ்ப் பக்கங்கள்

நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தihத் துதிப்பேன், நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன். சங். 146:2

என்னைப்பற்றி சிலவார்த்தை:

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் அன்பு நிறைந்த நாமத்தினால் உங்கள் அனைவரையும் இந்தப் பக்கங்களில் வரவேற்கிறேன்;.

இந்தப் பக்கங்களில் (தமிழ்ப்பக்கங்கள்) எனது ஆக்கங்களும் பயன் தரும் பக்கங்களும் உண்டு.

நான் விக்கிரக வழிபாட்டு முறையில் வளர்ந்து வந்தவன், அப்படி வளர்ந்தாலும் அவைகளை முறைப்படி வழிபட்டு வந்தாலும் என்னுடைய உள்ளத்தில் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்தது. இதற்கான பதிலை எதிலும் காணமுடியவில்லை. (வெங்காயத்தை உரித்து அதில் ஏதும் காண்பேன் என்பவன் சத்தியத்தை காணமுடியாதவன், அதேபோல்) கடவுள் என்றால் என்ன? என்பதை முன்னோர் சொல்லித் தந்த முறையில் காணக்கூடியதாக இல்லை, மனிதனால் கடவுளைத் தரிசிக்க முடியாது என்ற நிலை அத்துடன் நான் வழிபடுபவைகள் விக்கிரகங்களாக இருக்கிறதே, அவைகள் எப்படி செவி கொடுக்கும்? எப்படி பேசும்? எப்படி காணும்?

அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும்,மனுசருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது: அவைகளுக்கு கண்களிருந்தும் காணாது. அவைகளுக்கு காதுகளிருந்தும் கேளாது: அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்கு கைகளிருந்தும் தொடாது அவைகளுக்கு கால்களிருந்தும் நடவாது: தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும்,அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள். சங்கீதம் 115:4-8

இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு இவைகளுக்கான பதில் கிடைத்தது. அதன் ஊடாக எனது வாழ்வில் கண்டிராத உண்மைகளையும், நான் வாழ்ந்த அறியாமையுள்ள காலங்களையும் சிந்தித்தேன். ஆராய்ந்து பார்க்க,பார்க்க அந்த உண்மைகளை எந்த பணத்தினாலோ, பதவியினாலோ, படிப்பினாலோ எதனாலும் பெறமுடியாது என்பதை அறிந்து கொண்டேன். உலகத்தின் அதாவது மனிதனின் ஆரம்பம் முதல் உலகத்தின் இறுதிவரை எல்லாமே அந்த இடத்திலே காணக்கூடியதாக இருக்கிறது. அதுதான் பரிசுத்தவேதாகமம்.அதில் உள்ள வார்த்தைகள் மனித உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல,

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரேயர் 4: 12

இதன் ஊடாக ஜீவப் பாதையைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இங்கே கர்த்தர்; ஜீவனுள்ளவராகவும், வானத்தையும் பூமியையும் அதில் உள்ள யாவற்றையும் உண்டாக்கினவராயிருக்கிறார். இங்கே கர்த்தர் என்ன சொல்லுகிறார் என்றால்: பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப்பாருங்கள்;:அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்: நானே தேவன் வேறொருவரும் இல்லை. வானங்களைச் சிருஸ்டித்துப் பூமியையும் வெறுமையையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஏசையா 45:18,22

கர்த்தரோ மெய்யான தெய்வம்: அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா: அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்: அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்;. எரேமியா 10:10

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113:3

இங்கே நான் பெற்ற நித்தியமான அவருடைய அன்பையும், சமாதானத்தையும் உங்கள் ஒவ்வொருவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நாம் எல்லோரும் உள்ளத்திலே பாரம் மிகுந்தவர்கள் இந்தப் பாரத்தை (வருத்தமான) எங்கே இறக்கி வைக்க முடியும்? யார்தான் அவைகளை ஏற்றுக்கொள்வார்கள்? ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்' என்றார். எவ்வளவு ஆறுதல்

நான் ருசித்தவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பக்கங்கள், சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.......ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்' யோவான் 8:32,36

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி,அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.... அப்.16:31

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை: நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும்,மனுசர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.... அப்.4:12

எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்' அப்.10:35