Maranathitu Pin

மரணத்திற்குப் பின்

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை,பிதாவின் மடியிலிருக்கிற ஓரேபேறன குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

இந்த வினாடியில் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள், முறைப்படி உணவு அருந்திக் கொண்டு இருக்கலாம்,நீர் பருகிக்கொண்டு இருக்கலாம், அங்குமிங்கும் செல்லலாம்,பணிபுரியலாம்,உறங்கவும் செய்யலாம்,சுகவாழ்வு வாழலாம் அல்லது ஏழ்மையில் உழலலாம். சூரியன் உதயமாகிறது,அஸ்தமனமும் ஆகிறது.ஓரிடத்தில் ஒரு மகவு பெறப்படுகிறது.ஆன பிற நிகழ்ச்சிகளோடுங்கூட எங்கோ ஒருவர் மரணமும் அடைகின்றார். வாழ்க்கை முழுவதும் தற்காலிகச் செயல்கள் ஆனால் மரணத்திற்குப் பின் எங்கே செல்கின்றேன்?

நான் பெயர்க் கிறிஸ்தவனாகவும் இருக்கலாம் அல்லது இஸ்லாமியனாக இருக்கலாம் அல்லது இந்துவாகத் திகழலாம் அல்லது புத்த சமயத்தவனாக இருக்கலாம் அல்லது யூதராயிருக்கலாம்,அல்லது வேறு ஒரு மார்க்கத்தவராயும் இருக்கலாம்,அல்லது எந்த சமயத்தையும் நம்பாதவராயுமிருக்கலாம் ஆனால் நாம் இந்தச் சிறப்பான வினாவுக்கு விடை சொல்லத்தான் வேண்டும். ஏனெனில் இக்குறை நேர உலகவாழ்விற்குப்;பின் மனிதன் அவனது நிறைவான நித்திய இல்லம் ஏகின்றான்.

ஆனால் எங்கே ?

ஏனெனில் நீர் அடக்கம் பண்ணப்படும் கல்லறை உமது ஆத்துமாவை அடக்கி வைப்பதில்லை,அல்லது வனவிலங்குகளோ,பறவைகளாலோ புசிக்கப்பட்டாலும் அவை உமது ஆத்துமாவை விழுங்குவதில்லை, அல்லது உமது உடலை சுடலையிலிட்டாலும் உமது ஆத்துமாவை அது அழிப்பதில்லை. உமது ஆத்துமா ஒரு போதும் இறப்பதில்லை! வானத்தையும் பூமியையும் படைத்த கடவுள் சொன்னார் எல்லா ஆத்துமாவும் என்னுடையவைகள்.....எசேக்.18:4இந்த உடலினால் நீர் புரிந்த செயல்களை-- அவை தீமையோ,நன்மையோ மறுமையில் உமது ஆத்துமா அல்லது 'நீர்' சந்திப்பீர்.

நாம் உண்மையுடன் தொழுதிருக்கலாம் நாம் தவங்கள் இயற்றியிருக்கலாம் நாம் களவாய் எடுத்ததைத் திரும்பக் கொடுத்ததுமிருக்கலாம், இவை எல்லாம் அவசியந்தான் ஆனால் நமது பாவங்களுக்கு நாமே பிராயச்சித்தம் செய்ய இயலாது. வானத்தையும்,பூமியையும் உண்டாக்கினவர்,நீதி தவறாத நியாயாதிபதி உமது பாவத்தையும் வாழ்வையும் அறிந்துள்ளார்;.உமது பாவத்துடன் எதிர்கால மறு உலகின் ஆசீர்வாதங்களுக்குள்ளும்,மகிமைக்குள்ளும் நுழைய இயலாது.

ஆனால் இந்த வானலோகக் கடவுள் அன்பின் ஆண்டவர் உமது வாழ்வும் ஆத்துமாவும் மீட்படைய ஒரு வழி வகுத்துள்ளார். நீர் ஜெபித்து,உமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டால்,நீர் நித்திய அழிவு,நரகத் தீ என்னும் சாபத்திற்கு உட்படவேண்டியதில்லை.தேவன் இயேசுகிறிஸ்துவாகிய தமது குமாரன் ஊடாக மன்னிப்பை அருளுவார்.இந்த இயேசு உமது தீய செயல்களுக்காக தண்டிக்கப்பட்டார்.இந்த இயேசுவை,இக்கர்த்தரை மாத்திரமே நீர் தொழுது,ஜெபித்தால் அவர் உமது வாழ்வுக்கு சமாதானம் அருளி,மரணத்திற்குப்பின் மகிமையான வாழ்வைக்கொடுப்பார்.ஆனால் இந்த இயேசு--ஜீவனுள்ள தேவனின் குமாரன்,உமது சொந்த மீட்பராக முதலில் ஆக வேண்டும்.பிறகுதான் உமது ஆத்தமாவுக்கான மகிழ்வும் ஆறுதலுமான நித்திய இல்லம் நிச்சயமாகும்.

ஆனால் இயேசுவின் இந்த மீட்கும் அன்பை இவ்வாழ்வில் புறக்கணித்தோருக்கு அழிவின் பாதாளமும்,முடிவற்ற தீயுமே பங்காகும்.மரணத்திற்குப் பிறகு மீட்போ மனம்திரும்புதலோ இல்லை.முடிவின்றி நித்தியா நித்தியமாக நிரந்தர அழுகையும்,புலம்பலும்,பற்கடிப்புமே இருக்கும்.

பரிசுத்த வேதாகமமான ஜீவ அப்பத்தை பெற்று தேவ திட்டத்தை நீரே படித்துப்பாரும். தேவன் வேதாகமத்தில் விரைவில் வரும் உலகின் இறுதி நியாயத்தீர்ப்பைக் குறித்து விபரமாக எச்சரித்துள்ளார்.இந்த பரிசுத்த வேதாகமம் அந்த நிச்சயமான நியாயத்தீர்ப்பின் நாளுக்கு முன்னதாகத் தெளிவான குறிப்பிடத்தகுந்த அடையாளங்கள் நிகழும் எனவும் முன்னறிவிக்கின்றது. அவரது வருகைக்குமுன் சண்டைகளும்,யுத்தங்களின் செய்திகளும் துன்பங்களும்,நாடுகளுக்குள் கலக்கமும்,அதாவது ஒன்றோடொன்று நாடுகள் போர் செய்துகொள்ளும்.அவைகளின் நோக்கங்கள்,கொள்கைகள் ஆனவற்றின் வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியாத நிலமை இருக்கும் என்றும் வேதம் எச்சரிக்கிறது.பல இடங்களில் பூமி அதிர்வுகளும்,கொள்ளை நோய்களும் இருக்கும் இவை யாவும் சமீப ஆண்டுகளில் நிறைவேறிக்கொண்டு வருகின்றன. மேலும் தீமை செய்வோர் மேலும் மேலும் தீமையையே செய்துகொண்டு வருவர் என்றும்வேதம் எச்சரிக்கிறது. அதே சமயத்தில்,மக்கள் எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுக்காமல் கடவுளை நேசிக்காமல் தங்கள் இச்சைகளுக்கு ஏற்றபடிதான் நடப்பார்கள் என்றும் வேதம் கூறுகிறது.

நீதியுள்ள நமது பெரிய நியாயாதிபதியான கர்த்தர்நமது தற்கால செல்வத்தினாலோ, ஏழ்மையினாலோ, புகழினாலோ இகழ்வினாலோ,நிறத்தினாலோ,இனத்தினாலோ,குலத்தினாலோ,கொள்கையினாலோ, கவரப்படமாட்டார். நம்மை முற்றுமாக அவரிடத்தில் இருக்கிறவண்ணமாகவே ஒப்புக் கொடுப்பதையே அவர் விரும்புகிறார்.

'குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்,குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை,தேவனுடைய கோபம் அவன் மேல் நிலைநிற்கும். 'உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும் தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும் தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். யோவான்3:36 1யோவான்5:12

'எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்.10:35

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.

ஆமேன்,கர்த்தராகியஇயேசுவே,வாரும்;.