Brahmin Witness

ஜீவனுள்ள தேவன் என்னை முற்றுமாக மாற்றினார்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதம் கர்த்தருக்குள் உண்மையை சொல்லுகிறேன்.

நான் ஒரு இந்துக் குடும்பத்தில் ஒரு பிரதம குருவின் (ஐயருடைய) மகள் என்னுடைய தகப்பன் தாய் குடும்பம் எல்லாம் பரம்பரை ஐயர் அதன் முறையில் நான் பிறந்து வளர்ந்தேன் அப்படியான வழிபாட்டில் இருந்த என்னை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நான் தான் உயிர்உள்ள மெய்யான தெய்வம் என்று எத்தனையோ சாட்சியினுடாக எனக்கு காண்பித்தார் அதில் சிலவற்றை இதில் எழுதுகிறேன்.

1994ம் ஆண்டு எனது கணவரின் நெருங்கிய உறவினர்கள் சில வருடத்திற்கு பின் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அங்கே அவர்களின் வாழ்க்கை மாற்றத்தைப் பார்த்து எனது கணவருக்கு ஆச்சரியம் என்ன என்று கேட்டால் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்று சொன்னார்கள் அதன் பின் எனது கணவர் ஆண்டவih ஏற்றுக்கொண்டு வேதாகமம் படிக்க ஆரம்பித்துவிட்டார் 3மாதம் எங்கள் இரண்டு பேருக்கும் இடையில் சில வாக்குவாதங்கள் இந்த மூன்று மாதத்திற்குள் ஆண்டவர் என்னோடு பேசிக் கொண்டிருந்தார் நான் அந்த சத்தத்திற்க்கு செவி கொடுக்கவில்லை.

காரணம் என் ஆத்துமக் கண்குருடு நான் வளர்க்கப்பட்ட முறையில் வைராக்கியமாக இருந்தேன் அதனால்; அது தான் உண்மை என்று வாதாடுவேன் எனக்கு தெரிந்த அளவில் அப்போது நான் விக்கிரக வழிபாடு செய்கிறது அந்த நேரத்தில் அந்த விக்கிரகங்களுக்கு முன் நின்று எங்களுடைய ஆலயமூல ஸ்தானத்தை என் கண்முன் கொண்டு வந்து நான் வழிபடுவது நான் அறிந்த காலத்தில் இருந்து அப்படி செய்யும் போது ஒரு நாள் திடீர் என்று என் கண்முன் ஆண்டவராகிய இயேசுகிறஸ்;துவின் சிலுவைக்காட்சி நான் உடனே கண் முழித்து விட்டு அந்த இடத்தைவிட்டு போய்விடுவேன் பிறகு சிறிது நேரத்தில் பின் திரும்ப வந்து அதோபோல் வழிபாடு செய்தால் திரும்பவும் இந்த காட்சி என் கண்முன் வரும் இப்படி எனக்கு அடிக்கடி நடக்கிறது. அதலை; நான் போய் வழிபட்டாலும் எனக்கு நிம்மதி இல்லை சமாதானம் இல்லை.

இந்த மூன்று மாதம் எனக்கு எத்தனையோ காரியங்கள் நடக்குமுன் கனவு காண்பேன் அது அப்படியே நடந்து வரும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இதற்கிடையில் எத்தனையோ கஸ்டங்கள் பிரச்சனைகள் கவலைகள் இருந்தது எனக்கு ஆண்டவரைப்பற்றி யாரும் சொன்னால்; நான் அவர்களை பேசுவேன் என்னுடன் இந்த கதை கதைக்கவேண்டாம் என்று சொல்லுவேன் நான் சொல்லுகிறது நான் நம்பின இந்துக்கடவுள் தான் கடவுள் உண்மையான கடவுள் உண்டு என்றால் எனக்கு காட்டவேணும் என்று நான் இப்படி கேட்பதற்கு தகுதி அற்றவள். ஆலை; நான் உண்மை என்று நம்பி இவ்வளவு காலமும் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் இதுதான் உண்மை என்று வழிபடுகிறது அதை இல்லை என்றால் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாத நிலை இந்த மூன்று மாதமும் நான் பட்ட வேதனை அறிந்த ஆண்டவர் எனக்கு காட்டினார்.

அதன்பின் ஒரு கனவு என் வாழ்க்கையில் நடக்க இருந்த சம்பவம் அதை ஆண்டவர் எனக்கு கனவில் காட்டினார் அந்த சம்பவம் நான் நினைக்கவும் இல்லை நான் கனவிலே உடனே முழங்கால் படியிட்டு nஐபம் செய்தேன் செய்து முடித்து என்னுடனே பக்கத்தில் இருந்து கதைத்தவர் எங்கே என்று பார்க்க அவரைக் காணவில்லை. அந்த நேரத்தில் என்னுடன் இருந்தவர்களிடம் கேட்டேன் எனக்கு பக்கத்தில் இருந்து கதைத்தவர் எங்கே என்று. அவர்கள் எங்களுக்கு தெரியாது அப்படி உன்னுடன் யாரும் இருக்கவில்லையே என்று சொன்னார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே கண்முழித்து விட்டேன் இதற்கு பிறகு தான் என் கண் திறக்கப்பட்டது. என் அறியாமையை உணர்ந்தேன் கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேட்டேன் ஆண்டவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்தேன் என்னை முற்றுமாக ஒப்புக்கொடுத்தேன்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,

என்னுடைய பாவத்திற்காக பாடு பட்டு மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். என்று விசுவாசித்தேன். ஆண்டவரை ஏற்றுக்கொண்ட பின் என்னுடைய உள்ளத்திற்க்குள் சொல்ல முடியாத சந்தோசம் என்னை பார்க்கிறவர்கள் கேட்கிறது முதலில் பார்த்ததிலும் இப்போ பார்க்க சந்தோசமாக இருக்கிறிங்கள் எப்படி என்று நான் உடனே சொன்னேன் இயேசு கிறிஸ்து எனக்குள் இருப்பதுதான் அந்த சந்தோசம்.

அதன் பின்பு இன்னும் ஒரு தரிசனம் கர்த்தர் இடிமுழக்கத்தில் இருந்து என்னுடன் பேசினார் உனக்கு என்று ஒரு வேதாகமம்; தந்தேன். அதை உனக்கு என்று ஆசிர்வதித்து தந்தேன் அதில் ஒரு வசனம் தந்தேன் வாசித்தாயா? என்று கேட்டார் எனக்கு தந்தது,

ஆகாய்2:19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்று முதல் உங்களை ஆசிர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்;. நான் கூடிய சிக்கிரம் வருவேன் நீங்கள் வேதாகமம் படித்து அதன்படி நடவுங்கள் என்று சொன்னார்

இது நான் இரட்சிக்கப்பட்ட பின் முதல் முறை எனக்கு தரிசனத்தில் காட்சி தந்து என்னுடன் ஆண்டவர் பேசினார். அதன்பின் எத்தiயோ முறை சில காரியங்களை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் அன்றில் இருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்தேன். அதன் பின் வேதாகமம் படிக்க ஆரம்பித்தேன் எங்களுடைய கண் எப்பொழுது திறக்கப்படுகிறதோ அப்பொழுதுதான் உண்மை விளங்கும் உழையான சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும். அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

இன்றும் என்றும் சதாகாலங்களிலும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; உண்டாவதாக. ஆமென்.

கர்த்தராகிய இயேசுவே வாரும்.